/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்டால்... அதிருப்தி; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்டால்... அதிருப்தி; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்டால்... அதிருப்தி; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்டால்... அதிருப்தி; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 26, 2025 08:02 AM

கள்ளக்குறிச்சி, ஜூலை 26- கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் ஆப்சென்ட் ஆன அதிகாரிகள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலிறுத்தினர். கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சிவக்குமார், வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, துணை இயக்குநர் ஜோதிபாசு, உதவி இயக்குநர் அன்பழகன், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் ராஜேஷ், கால்நடைத்துறை மருத்துவர் கந்தசாமி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது;
மாவட்டத்தில் அதிகளவு மரவள்ளி பயிர் விளைவிக்கப்படுவதால் சேகோ தொழிற்சாலை அமைக்க வேண்டும். வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
ஆனால் விளைவித்த மரங்களை சந்தைப்படுத்த எவ்வித திட்டங்களும் இல்லை. வனப்பகுதியில் யூகலிப்ட்ஸ் மரங்கள் வளர்க்கப்படுவதால் வனவிலங்குகள் உணவின்றி விளைநில பயிர்களை சேதப்படுத்துகிறது.
இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது, எனவே வனப்பகுதியில் 100 ஏக்கருக்கு, 1 ஏக்கர் பரப்பளவில் பழமரங்களை நட்டு பராமரிக்க வேண்டும்.
கரும்பு பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. கிராமங்களில் உள்ள வயல்வெளி சாலைகளையும், பிரதான சாலைகளையும் இணைக்க வேண்டும். வேளாண்மை பொறியியல் துறை மூலமாக மானியத்தில் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் டிராக்டரில் அரசியல் தலையீடு உள்ளது.
அதில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும், சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாய ம் உள்ளதால், இறைச்சி கழிவுகளை கொட்ட தனி இடம் ஒதுக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் பட்சத்தில், வலது புற கால்வாய் வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 39 கிராமங்களை சேர்ந்த 44 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். தற்போது அணையில் 106 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பதால், சம்பா சாகுபடிக்கு முன்னதாக தண்ணீர் திறக்க வேண்டும். இந்த கால்வாய் கரைகள் துார்ந்துபோன நிலையில் இருப்பதால், கடைமடை வரை தண்ணீர் செல்லாது. எனவே கால்வாய்களை துார்வார வேண்டும்.
மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் இயற்கை உரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பயிரில் ஒரு நோய்க்கு பல்வேறு வகையான, தரமில்லாத மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், பருவமழை தொடங்கும் முன்னரே ஏரிகள் துார்வாரப்பட வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பருவம் தொடங்கியதும் வெள்ளை வேம்பு நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்புகளுக்கு முன்னுரிமை அளித்து வெட்ட அனுமதிக்க வேண்டும் என பேசினர்.