/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கல்
/
தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கல்
தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கல்
தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கல்
ADDED : ஜன 12, 2025 10:44 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் தமிழ்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2023--24ஆம் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வு எழுதிய 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.
இதன்படி, அரசு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி மாதவி மற்றும் 10ம் வகுப்பு மாணவிகள் கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி த்ருஷ்ணா, ரம்யாஸ்ரீ, புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி விஜயலட்சுமி, மூரார்பாது அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி பவித்ரா, அம்மன்கொல்லைமேடு அரசு உயர்நிலைப் பள்ளி சுபேதா, கீழ்ப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளி அர்ச்சனா, பல்லகச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி கஸ்துாரி ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ.1,000- பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இதில் சி.இ.ஓ., கார்த்திகா, டி.இ.ஓ., ரேனுகோபால், சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் தண்டபாணி உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.