/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கல்
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கல்
ADDED : ஜன 12, 2024 11:10 PM

கள்ளக்குறிச்சி, -கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 351 மாணவிகளுக்கு அரசின் இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
தமிழக அரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி வட்டார கண் மருத்துவ உதவியாளர் ஷகீலா தலைமையில் கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவிகளுக்கு கள்ளக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையில் பார்வை குறைபாடுகள் கொண்ட 351 மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
ஆர்.பி.எஸ்.கே. மருத்துவர்கள் ஜெனிபர் ராகுல், ரம்யா, மணிகண்டன், அம்பிகேஸ்வரி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை கீதா வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியைகள் வசந்தா, கற்பகம் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர். ஆசிரியை கீதா நன்றி கூறினார்.