தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/விநியோக திட்ட குறைகேட்பு சிறப்பு முகாம்

விநியோக திட்ட குறைகேட்பு சிறப்பு முகாம்

விநியோக திட்ட குறைகேட்பு சிறப்பு முகாம்


UPDATED : அக் 10, 2026 04:41 PM

ADDED : அக் 10, 2026 04:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 04:41 PM ADDED : அக் 10, 2026 04:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: வாணாபுரம், கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைகேட்பு சிறப்பு முகாம் நடந்தது.

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். இளைநிலை வருவாய் ஆய்வாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தார். முகாமில், ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் சேர்க்கை, பெயர் நீக்கம், முகவரி மற்றும் தொலைபேசி எண் மாற்றம், பிறந்த தேதி மற்றும் பெயர் திருத்தம், குடும்ப தலைவர் மாற்றம் தொடர்பாக 11 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.

இதேபோன்று, கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் குடிமைப் பொருள் பிரிவில் நடந்த முகாமிற்கு தனி தாசில்தார் சிலம்பரசன் தலைமை தாங்கினார். முகாமில், ரேஷன் கார்டில் பிழைகள் திருத்தம், பெயர், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக பெறப்பட்ட 31 மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது. இளநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, தனி வருவாய் ஆய்வாளர் மணிவேல் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us