/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோமுகி ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்; கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

ADDED : ஆக 18, 2025 12:23 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றுபாலம் அருகே பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவை மீறி குப்பை கொட்டி வருவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி துருகம் சாலை கோமுகி ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஆற்றில் கொட்டப்படும் குப்பையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால், அங்கு குப்பை கொட்ட பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.
ஆனால், தடை உத்தரவை மீறி பல ஆண்டுகளாக கள்ளக்குறிச்சியில் முழுதும் சேகரிக்கப்படும் குப்பைகள் கோமுகி ஆற்றங்கரையில் கொட்டப்பட்டு வருகிறது.
குப்பைகளை மறுசுழற்சி செய்ய நகராட்சிக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம், மீதமுள்ள குப்பைகளை மொத்தமாக கோமுகி ஆற்றங்கரையில் கொட்டி வருகிறது.
குப்பைகள் ஆற்று நிர்பிடிப்பு பகுதியில் நிரப்பி வருவதால் மழை காலங்களில் நீருடன் கழிவுகள் சேர்ந்து, நிலத்தடி நீர் மாசு அடைவதுடன், விவசாயமும் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக் கின்றனர்.
எனவே, கோமுகி ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.