/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திட மாவட்ட வேளாண் துறை அழைப்பு
/
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திட மாவட்ட வேளாண் துறை அழைப்பு
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திட மாவட்ட வேளாண் துறை அழைப்பு
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திட மாவட்ட வேளாண் துறை அழைப்பு
ADDED : அக் 14, 2024 09:41 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இந்த ஆண்டில் சிறப்பு பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு வரும் 31ம் தேதியும், சம்பா நெல் மற்றும் உளுந்து பயிருக்கு நவம்பர் 15ம் தேதி வரையிலும் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
பிரீமியம் கட்டணம் நெற்பயிர் ஏக்கருக்கு 511 ரூபாய், மக்காச்சோளத்திற்கு 308, பருத்திக்கு 483, உளுந்துக்கு 228 ரூபாய் ஆகும்.
இந்த பிரீமிய தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.