ADDED : அக் 29, 2025 11:36 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோ - கோ விளையாட்டு போட்டி நடந்தது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலுார் மற்றும் உளுந்துார்பேட்டை ஆகிய 5 குறுவட்டங்களில் 14, 17 மற்றும் 19 வயது என 3 பிரிவின் கீழ் கோ - கோ போட்டகள் நடந்தன.
தொடர்ந்து அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணியினருக்கு மாவட்ட அளவிலான போட்டி நடந்தது. மொத்தம் 15 அணிகள் போட்டியில் பங்கேற்றன. மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடத்தை பிடித்த அணியில் உள்ள வீரர்கள், அடுத்த கட்டமாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். உடற்கல்வி இயக்குநர் ஹரிஹரன், உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கர், தினகரன், இளையராஜா, சாமிதுரை, பழனிச்சாமி, சரவணன், நேதாஜி, ராஜா ஆகியோர் போட்டியை நடத்தினர்.

