/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
/
மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
ADDED : ஆக 22, 2025 10:02 PM

கள்ளக்குறிச்சி :பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான போட்டி, சங்கராபுரம் செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தல் நடந்தது. இதில் 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு, ஜூடோ, குத்துசண்டை, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக் போட்டி தனித்தனியாக நடத்தப்பட்டது. அதேபோல், குறுமைய விளையாட்டு போட்டிகளில் முதல் இடங்களை பிடித்து, மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவ, மாணவிகளுக்கான பீச் வாலிபால், வளைபந்து போட்டி சங்கராபுரம் ஜெயம் பள்ளியில் நடந்தது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மேற்பார்வையில், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு போட்டிகளை நடத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.