/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
/
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
ADDED : டிச 28, 2025 06:38 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
போட்டிக்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான் விக்டர் வரவேற்றார். கல்லுாரி டீன் அசோக்குமார் வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளர் இளையபாரத திட்ட மாவட்ட அலுவலர் சஞ்சனா வாட்ஸ், மாணவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டும்.
உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பது அவசியம். தினமும் நன்றாக துாங்க வேண்டும், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த கட்டமாக மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு முன்னேறி செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கபடி, சிலம்பம், வாலிபால், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ராஜா, ஹேமலதா ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
சோக்கேஷ் நன்றி கூறினார்.

