/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
திருக்கோவிலுாரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருக்கோவிலுாரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருக்கோவிலுாரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : ஜூலை 20, 2025 09:57 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சி மற்றும் ஊரக பகுதியில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுார் நகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சி பணி நடந்து வருகிறது. இதனை கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில், உயர் கல்வித்துறை அரசு செயலாளரான மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
பணியின் தரம் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி, பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், நகராட்சி ஆணையர் திவ்யா, பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதைத் தொடர்ந்து, திருக்கோவிலுார் - ஆசனுார் சாலை, நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணியினையும் பார்வையிட்டு தரம் குறித்த ஆய்வு செய்தனர்.