/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூவனுாரில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
/
கூவனுாரில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
ADDED : நவ 11, 2025 11:33 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த கூவனுாரில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அரசு இடத்தை கல்வித்துறைக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கை குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா நேரில் ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது.
இப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், பள்ளி வளாகத்தில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தை கல்வித்துறைக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் வருவாய் துறைக்கு மனு அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கல்வித்துறைக்கு இடத்தை மாற்றம் செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கிராம மக்கள் இதனால் ஏற்படும் பயன்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் விளக்கி கூறினர்.

