/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மாவட்ட ஆய்வு கூட்டம்
/
நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மாவட்ட ஆய்வு கூட்டம்
நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மாவட்ட ஆய்வு கூட்டம்
நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மாவட்ட ஆய்வு கூட்டம்
ADDED : நவ 09, 2024 03:22 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, கல்வி, மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட தொழில் மையம், ஊரக வளர்ச்சித்துறை, மின் சார வாரியம், மகளிர் திட்டம், பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு துறை சார்பில் செய்யப்பட வேண்டிய இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட ஊராட்சி செயலாளர் இளங்கோவன், புள்ளியியல் துறை துணை இயக்குனர் முத்துக்குமரன், உதவி இயக்குனர் (கோட்ட புள்ளியியல்) செல்வராஜ் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.