/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட மாவட்ட மேற்பார்வையாளர் அறிவுறுத்தல்
/
22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட மாவட்ட மேற்பார்வையாளர் அறிவுறுத்தல்
22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட மாவட்ட மேற்பார்வையாளர் அறிவுறுத்தல்
22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட மாவட்ட மேற்பார்வையாளர் அறிவுறுத்தல்
ADDED : ஜன 19, 2024 11:05 PM

கள்ளக்குறிச்சி, - வரும் 22ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலை அரசு அலுவலகங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட மேற்பார்வையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை மேற்கொள்ளும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் (ஆர்.டி.ஓ.,க்கள்), உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் (தாசில்தார்கள்) மற்றும் தேர்தல் துணை தாசில்தார்களுடான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் வள்ளலார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான அனைத்து புகார்களுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வாக்காளர்களை விடுபடாமல் சேர்த்திட வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் கவனமுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக சேர்க்கை படிவம் - 6 மூலம் பெறப்படும் படிவங்கள் மீது உரிய ஆய்வு செய்து சேர்த்திட வேண்டும்.
அச்சிடப்பட்டு வரப்பெற்ற வாக்காளர் அடையாள அட்டையினை புதிய வாக்காளர்களுக்கு அஞ்சல் மூலம் விரைந்து அனுப்பிட வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 22ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இந்த இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்டத்தில் 26 ஆயிரத்து 63 புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை அச்சிடுவதற்கு சம்மந்தப்பட்ட முகவருக்கு அனுப்பப்பட்டுள்ள விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, ஆர்.டி.ஓ., (பொறுப்பு) கிருஷ்ணன், தேர்தல் தனி தாசில்தார் பசுபதி உட்பட தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.