/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருக்கோவிலுாரில் ஆய்வு
/
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருக்கோவிலுாரில் ஆய்வு
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருக்கோவிலுாரில் ஆய்வு
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருக்கோவிலுாரில் ஆய்வு
ADDED : ஆக 18, 2025 12:12 AM
திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணி திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலரான சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுாரில் அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரான சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 4.71 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கூடுதல் கட்டட பணியை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். சத்துணவை சுத்தமாகவும், சுகாதாரமான முறையில், சுவையான வகையில் தயாரித்து வழங்க அறிவுறுத்தினார்.
ரூ. 3.75 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் கோட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணி மற்றும் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பதிவேடுகள் மற்றும் மருந்து இருப்பு, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை ஆய்வு செய்தார். ரூ. 1.20 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்து தரமாகவும், பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், தாசில்தார் ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் திவ்யா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

