/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
/
மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
ADDED : ஜூலை 27, 2025 11:10 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.
விஷ்வ ஹிந்து பரிஷத்தில் புதிதாக மாவட்ட, ஒன்றிய, நகர நிலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தியாகதுருகம் பல்லகச்சேரி தான்தோன்றீஸ்வரர் சுந்தர மடத்தில் பொறுப்பேற்பு விழா நடந்தது.
விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். கோட்ட அமைப்பு செயலாளர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமிதுரை வரவேற்றார்.
மாநில துணை தலைவர் காய்தரி ஸ்ரீதர், மாநில தர்ம பிரசார் அமைப்பாளர் அழகிரி, அர்ச்சகர் புரோகித் எனும் பூஜாரிகள் பேரமைப்பின் மாநில துணை செயலாளர் அம்மணி அம்மன் ரமேஷ் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினர்.
மாநில ஊடக பிரிவு இணை அமைப்பாளர் சுதர்சன், மாவட்ட ஊடக பிரிவு அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட கோ ரக்ஷா அமைப்பாளர் திருமாலழகன், மாத்ரு சக்தி மாவட்ட அமைப்பாளர் மங்கலம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாவட்ட இணை செயலாளர் வேலு ஒருங்கிணைத்தனர்.
மாவட்ட பொருளாளர் சிவராஜ் நன்றி கூறினார்.

