/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விஜயகாந்த் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நிழற்குடைகள் இடித்து அகற்றம் அவசியம்தானா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியா
/
விஜயகாந்த் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நிழற்குடைகள் இடித்து அகற்றம் அவசியம்தானா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியா
விஜயகாந்த் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நிழற்குடைகள் இடித்து அகற்றம் அவசியம்தானா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியா
விஜயகாந்த் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நிழற்குடைகள் இடித்து அகற்றம் அவசியம்தானா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியா
ADDED : ஜன 16, 2024 06:26 AM

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தொகுதி மேம்பாட்டு நிதியில் மணலுார்பேட்டையில் கட்டப்பட்ட நிழற்குடை அகற்றியதை கண்டித்து 20ம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கடந்த 2011ம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். அவர், தொகுதி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
கூட்டணி கட்சியான அ.தி.மு.க., வுடன் நேரடி மோதல் ஏற்பட்டாலும், மத்திய பா.ஜ., அரசுடனான நல்லுறவு காரணமாக, தமிழக அரசையும் மீறி மத்திய அரசின் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்.
இதற்கு முன்பாகவே 2013-2014ம் நிதி ஆண்டில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் மணலுார்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் அருகே நிழற்குடை கட்டப்பட்டது. பாலம் கட்டியதன் காரணமாக திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால், நிழற்குடை அமைந்த பகுதியில் ஏராளமான கடைகளும் உருவானது.
சாலை விரிவாக்கப் பணி நடந்து வரும் சூழலில், கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு நிழற்குடை இடையூறாக இருப்பதாகக் கூறி அதனை அகற்ற கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நெடுஞ்சாலை துறையினர் முயன்றனர்.
இதற்கு தே.மு.தி.க., வினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மழைநீர் வடிகால் கட்டியபிறகு அதன் மேல், அதேபோல் நிழற்குடை கட்டிக் கொடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.
இதேபோன்று, மாடாம்பூண்டி கூட்டு சாலையில் ரவுண்டானா அமைப்பதற்காக, தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட மற்றொரு நிழற்குடையும் இடித்து அகற்றப்பட்டது.
தற்போது மழைநீர் வடிகால் பணி முடிந்து 2 மாத காலம் ஆகியும் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதே போன்று, ரவுண்டான அமைக்க இருந்த இடத்தில் அகற்றப்பட்ட நிழற்குடையும் கட்டப்படவில்லை. இதுகுறித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ., வாக இருந்தபோது செய்த மக்கள் பணிகளை மறைக்கும் விதமாக, செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்து, வரும் 20ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட தே.மு.தி.க., சார்பில் மணலுார்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், மணலுார்பேட்டை, மாடாம்பூண்டி கூட்டு சாலை உள்ளிட்ட பிரதான இடங்களில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பெயரை தாங்கி நின்ற நிழற்குடை அகற்றப்பட்டது உண்மையிலேயே அரசியல் காழ்ப்புணர்ச்சியா? அல்லது அவசியம் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.