தி.மு.க., - த.வெ.க., மோதல்: கார் கண்ணாடி உடைப்பு
தி.மு.க., - த.வெ.க., மோதல்: கார் கண்ணாடி உடைப்பு
ADDED : ஏப் 23, 2026 11:26 PM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே தி.மு.க., மற்றும் த.வெ.க., நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
பாக்கம் ஊராட்சியில் நேற்று காலை ஓட்டுப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்குள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் ஓட்டுச்சாவடியை பார்வையிட்டு சென்றார்.
அப்போது, அங்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த த.வெ.க.,வினர் விசில், விசில் என சத்தம் கோஷமிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க., நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த த.வெ.க., நிர்வாாகியின் கார் கண்ணாடியை தி.மு.க.,வினர் அடித்து உடைத்தனர்.
உடன் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று இரு கோஷ்டிகளையும் தடுத்து நிறுத்தி கூட்டத்தை கலைத்தனர்.
கள்ளக்குறிச்சி: கூந்தலுார் கிராமத்தில் ஓட்டுச்சாவடியில் வி.சி., வேட்பாளர் மாலதி ஆய்வு செய்தார். அப்போது, த.வெ.க.,வினர் அவரை வழிமறித்து தங்களது சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர்.இதனை கண்டு கொள்ளாமல் வேட்பாளர் மாலதி, ஓட்டுச்சாவடிக்கு சென்று ஆய்வு செய்து விட்டு பின்னர் மீண்டும் திரும்ப காரில் வந்தார். அப்போது மீண்டும் த.வெ.க.,வினர் சிலர் அவரை வழிமறிக்க முயன்றபோது, வேட்பாளர் மாலதியுடன் வந்த தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும், த.வெ.க.,வைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து நிர்வாகிகள் சிலர் இரு தரப்பினரையும் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.
