ADDED : பிப் 19, 2025 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம் ஊராட்சி, தொட்டியம் கிராமத்தில், தி.மு.க., பூத் ஏஜன்ட் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
மேலிட பொறுப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அன்பு மணிமாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முகவர்கள் ஒவ்வொருவரும், 100 ஓட்டுகளை கட்சிக்கு பெற்றுத்தர அறிவுறுத்தப்பட்டது. கிளைச் செயலாளர் சேதுபதி உட்பட பூத் ஏஜன்ட்டுகள் பங்கேற்றனர்.
இதேபோல கடத்துார், ஏர்வாய்பட்டினம், பி.பி.அகரம், தகரை உள்ளிட்ட கிராமங்களிலும், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.