/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியை தட்டி துாக்கிய தி.மு.க.,
/
கள்ளக்குறிச்சியை தட்டி துாக்கிய தி.மு.க.,
ADDED : மார் 19, 2024 06:26 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியை கூட்டணிகளுக்கு விட்டுக் கொடுக்காமல் தி.மு.க., 4வது முறையாக போட்டியிடுகிறது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியை தி.மு.க., கூட்டணியில் யார் பெறுவது என்பது குறித்து நீண்ட போராட்டமே நடந்தது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் கவுதம சிகாமணி 3 லட்சத்து 99 ஆயிரத்து 919 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதன் காரணமாக இத்தொகுதியை தங்கள் வசமே வைத்துக் கொள்ள வேண்டும் என தி.மு.க., விரும்பியது. ஆனால் கூட்டணியில் உள்ள காங்., மற்றும் வி.சி., கட்சிகள் கள்ளக்குறிச்சியை கேட்டு அடம் பிடித்தன.
வி.சி., க்கு பொதுத்தொகுதி கிடையாது என விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தனி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு காங்., கட்சியும் கள்ளக்குறிச்சியை கேட்டு தொடர்ந்து வலியுறுத்தியது.
இந்நிலையில் நேற்று காங்., கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி பட்டியல் வெளியானது. அதில் கள்ளக்குறிச்சி வழங்கப்படவில்லை. இதன் மூலம் கூட்டணிக்கு விட்டுக் கொடுக்காமல் கள்ளக்குறிச்சியை தி.மு.க., பிடிவாதமாக தன் வசம் வைத்துக் கொண்டுள்ளது.
தொகுதி மறு சீரமைப்பில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் 2009, 2014, 2019 ஆகிய தேர்தலை தொடர்ந்து 2024 தேர்தலிலும் 4 வது முறையாக தி.மு.க., கள்ளக்குறிச்சி தொகுதியில் நேரடியாக களம் காண்கிறது.

