ரிஷிவந்தியம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல்
ரிஷிவந்தியம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல்
ADDED : ஏப் 03, 2026 06:11 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வசந்தம் கார்த்திகேயன் நேற்று மனு தாக்கல் செய்தார்.
ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதையொட்டி மெயின்ரோட்டில் இருந்து தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி களுடன் தாலுகா அலுவலகத்திற்கு நடந்து சென்றார்.
அங்கு, காலை 11.10 மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து, உறுதிமொழி படிவத்தை வாசித்தார்.
அப்போது, காங்., மாவட்ட தலைவர் இதாயத்துல்லா, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன், வி.சி., மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம், கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்து வெளியே வந்த வசந்தம் கார்த்திகேயனுக்கு தி.மு.க., கட்சியினர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித் தனர்.
