/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துணை முதல்வர் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு நிர்வாகிகளுக்கு தி.மு.க., மாவட்ட செயலாளர் அழைப்பு

ADDED : அக் 18, 2024 07:00 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் துணை முதல்வர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் புவனேஸ்வரி பெருமாள், காமராஜ், அண்ணாதுரை, நகர செயலாளர் சுப்ராயலு முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
துணை முதல்வர் உதயநிதி நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திற்கு மாலை 3 மணிக்கு வருகிறார். துணை முதல்வரான பின் முதல் முறையாக வருகை தரும் அவருக்கு கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்று பிரமாண்ட வரவேற்பு அளிக்கவேண்டும்.
மணலுார்பேட்டை, மாடாம்பூண்டி கூட்ரோடு, தியாகதுருகம், மாடூர் டோல் கேட், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு ஆகிய 5 இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்று துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
ஒன்றிய செயலாளர்கள் ரிஷிவந்தியம் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், தியாகதுருகம் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய சேர்மன் தாமோதரன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர் உள்ளிட்ட கட்சி யினர் பலர் பங்கேற்றனர்.