தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தி.மு.க., - தே.மு.தி.க., முட்டல் மோதல் ஆரம்பம்

 தி.மு.க., - தே.மு.தி.க., முட்டல் மோதல் ஆரம்பம்

 தி.மு.க., - தே.மு.தி.க., முட்டல் மோதல் ஆரம்பம்


ADDED : பிப் 24, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்துள்ள நிலையில் ரிஷிவந்தியத்தை அக்கட்சிக்கு தாரை வார்த்து விடக்கூடாது என உடன்பிறப்புகளின் கோரிக்கை குரல் தொகுதியில் வலுத்து வருகிறது.

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., கடந்த வாரம் இணைந்தது. விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட காரணமாக இருந்த ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடப் போவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

ரிஷிவந்தியம் தொகுதியை பொறுத்தவரை காங்., கட்சி சார்பில் 1984, 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் சிவராஜ் அ.தி.மு.க., - தி.மு.க., என மாறி மாறி கூட்டணி அமைத்ததில் 4 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர் வெற்றி பெற்ற போதிலும் ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள கிராமத்தின் வளர்ச்சிக்கு எதிர்பார்த்த திட்டங்களை கொண்டு வரவில்லை என்ற ஆதங்கம் தொகுதி மக்களிடையே இருந்தது.

இந்த சூழ்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து இத்தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டார்.

சிவராஜ் மீது இருந்த அதிருப்தி மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் இத்தொகுதியில் அதிகம் இருந்ததாலும் அ.தி.மு.க., கூட்டணி பலத்துடன் 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். ஆனால் 6 மாதத்தில் அ.தி.மு.க,வுடன் இருந்த தே.மு.தி.க.,வின் கூட்டணி முறிந்தது.

அதன் பிறகு 2016 பதவி காலம் முடியும் வரை மக்கள் எதிர்பார்த்த எந்த நலத்திட்டங்களும் தொகுதியில் மேற்கொள்ளப்படவில்லை.

மத்திய அரசின் நிதியைப் பெற்று மணலுார்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் உயர் மட்டபாலத்தை விஜயகாந்த் அமைத்துக் கொடுத்தார்.

ரிஷிவந்தியத்தை 'குஷி'வந்தியமாக மாற்றுவேன் என்று பிரசாரம் செய்து வெற்றி பெற்ற விஜயகாந்த் பெரிய திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வரவில்லை.

இதே 2016 தேர்தலில் தி.மு.க., சார்பில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட வசந்தம் கார்த்திகேயன் வெற்றி பெற்றார்.

அப்போது அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்ததன் காரணமாக தொகுதியில் எதிர்பார்த்த திட்டங்களை வசந்தம் கார்த்திகேயனால் செய்ய முடியவில்லை. 2021 தேர்தலில் வசந்தம் கார்த்திகேயன் மீண்டும் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பின், சாலை உட்கட்டமைப்பு வசதிகள், தடுப்பணைகள், பாலம், குடிநீர் வசதி என அடிப்படை வசதிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி உறுதியாகி உள்ளதால் ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

இது தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தொகுதியில் தே.மு.தி.க.,வின் பலம் வெகுவாக குறைந்துவிட்டது.

முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சி மாறிவிட்டனர். தற்போதய நிலையில் தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியாக ரிஷிவந்தியம் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கேட்டு பெற்று எந்தவித சிரமமும் இன்றி எம்.எல்.ஏ., ஆகிவிடலாம் என தே.மு.தி.க., தலைமை கன வு காணுவதாக உடன் பிறப்புகள் குமுறுகின்றனர்.

ரிஷிவந்தியத்தை எக்காரணம் கொண்டும் தே.மு.தி.க.,விற்கு தாரை வார்த்து விடக் கூடாது என்ற கோரிக்கை தி.மு.க., தொண்டர்களிடையே வலுத்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us