/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 31, 2025 11:09 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் கல்லுாரி மாணவர்களிடம் தி.மு.க., மாவட்ட மாணவர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி மாணவர்களுக்கு வழங்கினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணை சேர்மன் தங்கம், திருக்கோவிலுார் நகர மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் உமாமகேஸ்வரி குணா, நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் பிரபு, கவுன்சிலர் சக்திவேல், தொ.மு.ச., சரவணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளர்கள் அறிவழகன், வினோத், மோகன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

