/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை உளுந்துார்பேட்டையில் துவக்கம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை உளுந்துார்பேட்டையில் துவக்கம்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை உளுந்துார்பேட்டையில் துவக்கம்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை உளுந்துார்பேட்டையில் துவக்கம்
ADDED : ஜூலை 05, 2025 03:31 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாமை, மாவட்ட செயலாளர் துவக்கி வைத்தார்.
உளுந்துார்பேட்டை நகர தி.மு.க., சார்பில் நகராட்சி 1வது வார்டு பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.
நகர செயலாளர் டேனியல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
பின்னர் வீடு தோறும் ஸ்டிக்கர் ஒட்டினர். நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், நகராட்சி கவுன்சிலர்கள் கலா சுந்தரமூர்த்தி, சாந்தி மதியழகன், முருகவேல், குருமனோ, ராஜேஸ்வரி சரவணன், நகர பொருளாளர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.