/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை
ADDED : ஜூலை 08, 2025 10:50 PM

கள்ளக்குறிச்சி; பூண்டி கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் நடந்த தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையை தொகுதி பொறுப்பாளர் ஆய்வு செய்தார்.
சின்னசேலம் அடுத்த பூண்டி ஊராட்சி விநாயகபுரம் பகுதியில் தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறி, அரசின் திட்டங்களை பெற்று பயன் அடைந்துள்ளீர்களா, வேறு ஏதேனும் அரசு திட்டங்கள் தேவைப்படுகிறதா என கேட்டறிந்தனர்.
வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி, பொதுமக்களிடம் 6 கேள்விகள் எழுப்பி கையெழுத்து பெற்றனர். இதனை தி.மு.க., சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தாமரைகண்ணன் ஆய்வு செய்தார். அப்போது, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் சின்னதம்பி, பிரகாஷ், கிளை செயலாளர்கள் துரைமுருகன், ஜெயசீலன், வெங்கடாசலம், வரதன் மற்றும் ஓட்டுச்சாவடி பாக முகவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.