ADDED : பிப் 14, 2026 05:04 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வழங்கப்பட்டதற்கு கள்ளக்குறிச்சி நகர தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழகத்தில் மகளிர் உரிமை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் கள்ளக்குறிச்சி நகர்மன்ற சேர்மன் சுப்ராயலு தலைமையில் நான்கு முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.
நகர்மன்ற துணை சேர்மன் ஷமீம்பானு அப்துல்ரசாக், நகர கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செல்வராஜ், உமா வெங்கடேசன், பாத்திமா அபுபக்கர், விமலா விஜய் மனோஜ், நகர மகளிரணி நிர்வாகிகள் ராணி, காயத்ரி, கீதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
