தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 13, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 03:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அரகண்டநல்லுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ., விற்கு துணை போகும் அ.தி.மு.க., வை கண்டிப்பது, 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் உள்ளிட்ட மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து நேற்று அரகண்டநல்லுார் ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார்.

தி.மு.க., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அன்பு வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் முருகன், காங்., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., - வி.சி., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., நகர செயலாளர் சுப்ராயலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் கள்ளக்குறிச்சி தொகுதி பார்வையாளர் தாமரைக்கண்ணன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காங்., - வி.சி., - ம.தி.மு.க., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - மனிதநேய மக்கள் கட்சி உட்பட மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தியாகதுருகம் தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழி யன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். மா வட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய சேர்மன் தாமோதரன் கண்டன உரையாற் றினர். கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் இதயத்துல்லா, ராமசாமி, ஜெய்சங்கர், மதியழகன், பாஸ்கர், ரஷித்கான், பசல் முகமது உட்பட பலர் பங்கேற்றனர். பேரூராட்சி துணை சேர்மன் சங்கர் நன்றி கூறினார்.

விழுப்புரம் வளவனுார் நான்கு முனை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பேரூராட்சி நகர தி.மு.க., செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சின்னசேலம் சின்னசேலம் பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை சேர்மன் அன்புமணி மாறன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, ஒன்றிய செயலாளர்கள் கதிரவன், செல்வம், பன்னீர்செல்வம் மற்றும் சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் நாகராஜன், மாவட்ட காங்., தலைவர் இதாயத்துல்லா முன்னிலை வகித்தனர். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us