தொகுதி மறு வரையறையை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தொகுதி மறு வரையறையை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 16, 2026 05:57 PM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லூரில் தொகுதி மறு வரையறை மசோதாவை எதிர்த்து ராவத்தநல்லூரில் தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லூரில் நேற்றுநடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க மாவட்ட செயலாளர், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ராவத்தநல்லுார் பகுதிகளில் தி.மு.க.,வினர் கருப்புக் கொடி கட்டியும்,கையில் கருப்பு கொடி ஏந்தியும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய் ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர் பிரபு, கழக முன்னோடிகள் நல்லதம்பி, மணி, குமாரசாமி, பாண்டுரங்கன், ஷீலாராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
