/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., நிவாரணம் வழங்கல்
/
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., நிவாரணம் வழங்கல்
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., நிவாரணம் வழங்கல்
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., நிவாரணம் வழங்கல்
ADDED : டிச 15, 2024 07:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு இரண்டாம் கட்டமாக தி.மு.க., சார்பில் நிவாரணம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.
ஒன்றிய துணை சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ், ஊராட்சி தலைவர் பரமசிவம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜய ஆனந்த் முன்னிலை வகித்தனர்.
வெள்ளத்தால் பாதித்த பொது மக்களுக்கு அரிசி, மளிகை தொகுப்புகள், போர்வை, வேட்டி, சேலை, பாய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.