/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலத்தில் தி.மு.க., பொதுக்கூட்டம்
/
சின்னசேலத்தில் தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : ஏப் 02, 2025 06:16 AM

சின்னசேலம் : சின்னசேலம், காந்தி பொதுமேடையில் தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
உதயசூரியன் எம். எல். ஏ., தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி துணைச்செயலாளர் அங்கயற்கண்ணி, தொகுதி பொறுப்பாளர் அன்பழகன், துணை சேர்மன் அன்புமணி மாறன் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
கொள்கை பரப்புச் செயலாளர் லியோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி அரசின் சாதனைகள் குறித்து பேசினார். வார்டு கவுன்சிலர்கள் ஹபீபா, மகாலட்சுமி, காந்தி, கிளைச் செயலாளர்கள் சேதுபதி, தங்கவேல், அன்பரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

