ADDED : மே 12, 2025 02:25 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரில், தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், எம்.பி., மலையரசன், ஒன்றிய அவை தலைவர் ஜெயபால், துணை செயலாளர்கள் கண்ணன், முருகேசன், பரமேஸ்வரி மணிவேல், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் ஆதி, சக்திவேல், சத்யா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர் காமராஜ் வரவேற்றார். கூட்டத்தில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் பரசுராமன், தொகுதி பொறுப்பாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் நிர்வாகிகள் விமலா முருகன், பிரகாஷ், சிங்காரவேல், இளவரசு, சண்முகம், கண்ணதாசன், முரளி, சுரேந்திரன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.