/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது உளுந்துார்பேட்டையில் அன்புமணி ஆவேசம்
/
தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது உளுந்துார்பேட்டையில் அன்புமணி ஆவேசம்
தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது உளுந்துார்பேட்டையில் அன்புமணி ஆவேசம்
தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது உளுந்துார்பேட்டையில் அன்புமணி ஆவேசம்
ADDED : ஆக 15, 2025 03:28 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் மக்கள் உரிமை மீட்பு பயணத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:
நான் ஓட்டுக்காக, விளம்பரத்துகாக வரவில்லை. உரிமைகளை மீட்க நடைபயணம் தொடங்கியுள்ளேன். தி.மு.க.,வின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும்.
சட்டசபை தேர்தலில் யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரகூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தலில் 39 தி.மு.க.. எம்.பி.,க்கள் வெற்றி பெற வைத்தீர்கள். அவர்களால் தமிழகத்திற்கு பயனில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 பேர், மரக்காணத்தில் 22 பேர் கள்ளச்சாராயத்தால் இறந்தனர். குட்காவை இந்தியாவிலேயே தடை செய்தவன் நான். உலகளவில் இருக்கும் புகையிலையை தன்னந்தனியாக எதிர்த்தவன் நான். பொது இடங்களில் புகை குடிக்க கூடாது என சட்டத்தை கொண்டு வந்தேன்.
தனியார் துறைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க.. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வரும்போது தான் மக்களை ஏமாற்றுவதற்காக ஏராளமான அறிவிப்புகளை அறிவிப்பார்கள். இவர்கள் டிராமா நடத்திக் கொண்டு இருக்கின்றனர். தி.மு.க.. பொறுப்பாளரான ஜாபர் சாதிக்கை போதை பொருள் வழக்கில் போலீசார் கைது செய்தனர். ஒரு விவசாயி கூட சந்தோஷமாக இல்லை. தி.மு.க.. மீண்டும் வரகூடாது. வரும் தேர்தலில் தி.மு.க., எதிர்க்கட்சியாகக்கூட வரகூடாது. இவ்வாறு அன்புமணி பேசினார்.
பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் எம்.பி., தன்ராஜ், எம்.எல்.ஏ.. சிவக்குமார், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ராஜா, ஒன்றிய தலைவர்கள் அண்ணாமலை, செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், அய்யனார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் விஜய், நகர நிர்வாகிகள் ராஜகணபதி, சரத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.