/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணலூர்பேட்டையில் தி.மு.க., தெருமுனை பிரச்சார கூட்டம்
/
மணலூர்பேட்டையில் தி.மு.க., தெருமுனை பிரச்சார கூட்டம்
மணலூர்பேட்டையில் தி.மு.க., தெருமுனை பிரச்சார கூட்டம்
மணலூர்பேட்டையில் தி.மு.க., தெருமுனை பிரச்சார கூட்டம்
ADDED : ஜூலை 02, 2025 07:45 AM

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டையில் தி.மு.க., சார்பில் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட மணலுார்பேட்டை பேரூராட்சியில், தி.மு.க., அரசின் நான்காண்டு கால சாதனைகள் விளக்கி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இளைஞரணி அமைப்பாளர்கள் ரவிக்குமார், திருநாவுக்கரசு தலைமை தாங்கினர்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாலாஜி பூபதி, ராஜிவ் காந்தி வரவேற்றனர். மணலுார்பேட்டை நகர செயலாளர் ஜெய்கணேஷ், ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் முன்னிலை வகித்தனர். ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பங்கேற்று ஆட்சியின் நான்காண்டு கால சாதனைகளை விளக்கி பேசினார். தலைமைக் கழக பேச்சாளர் நாகநந்தினி, தொகுதி பார்வையாளர் பெருநற்கிள்ளி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.