sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வெற்றி: மூன்றாவது முறையாக தக்கவைத்தது

/

கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வெற்றி: மூன்றாவது முறையாக தக்கவைத்தது

கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வெற்றி: மூன்றாவது முறையாக தக்கவைத்தது

கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வெற்றி: மூன்றாவது முறையாக தக்கவைத்தது


ADDED : ஜூன் 05, 2024 12:09 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: விறு விறுப்பாக நடந்த கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில், தி.மு.க., வேட்பாளர் மலையரசன்53,784 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், மின்னணு இயந்திரத்தில் 12 லட்சத்து 42 ஆயிரத்து 597 ஓட்டுகளும், 8 ஆயிரத்து 456 தபால் ஓட்டுகளும் பதிவாகின. இதில், 536 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டன.

சின்னசேலம் அடுத்த அ.வாசுதேவனுார் மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் 24 சுற்றுகளாகவும், தபால் ஓட்டுகள் 4 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் மலையரசன்-22,712, அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு-22,324, பா.ம.க., தேவதாஸ்- 2,587, நாம் தமிழர் கட்சி ஜெகதீசன்-2,379 ஓட்டுகள் பெற்றனர்.

2வது சுற்றில் தி.மு.க.,-24,790, அ.தி.மு.க.,-22,615, பா.ம.க,-3,267, நாம் தமிழர் கட்சி- 3,180; 3வது சுற்று தி.மு.க.,-24,861, அ.தி.மு.க.,-20,606, பா.ம.க.,-3,028, நாம் தமிழர்-2,879, 4வது சுற்று தி.மு.க.,-28,073, அ.தி.மு.க., -22,022, பா.ம.க,-3,692, நாம் தமிழர்-3,457; 5வது சுற்று தி.மு.க.,-27,828, அ.தி.மு.க.,-22,256, பா.ம.க, -3,379, நாம் தமிழர்-3,829; 6வது சுற்று தி.மு.க.,-23,687, அ.தி.மு.க.,-24,821, பா.ம.க,-3,578, நாம் தமிழர்-3,311 ஓட்டுகள் பெற்றனர்.

7வது சுற்றில் தி.மு.க.,-26,125, அ.தி.மு.க.-24,424, பா.ம.க,-3,739, நாம் தமிழர்-3,279; 8வது சுற்று தி.மு.க.,-25,596, அ.தி.மு.க.,-23,066, பா.மக.,-3,247, நாம் தமிழர்-3,471; 9வது சுற்று தி.மு.க.,-27,614, அ.தி.மு.க.,-24,680, பா.ம.க,-2,491, நாம் தமிழர்-3,216; 10வது சுற்று தி.மு.க., - 25,645, அ.தி.மு.க., - 23,876, பா.ம.க.,-2,969, நாம் தமிழர்-3,417; 11வது சுற்று தி.மு.க., -26,129, அ.தி.மு.க.-23,185, பா.ம.க, 3,856, நாம் தமிழர்-3,496; 12வது சுற்று தி.மு.க.,-25,845, அ.தி.மு.க.,-22,312, பா.ம.க,-3,570, நாம் தமிழர்-3,144 ஓட்டுகள் பெற்றனர்.

அதேபோல் 13வது சுற்று தி.மு.க.,-26,524, அ.தி.மு.க.,-22,856, பா.ம.க,-3,543, நாம் தமிழர்-3,210; 14வது சுற்று தி.மு.க.,-27,069, அ.தி.மு.க.,-24,811, பா.ம.க,-2,808, நாம் தமிழர்-3,579; 15 வது சுற்று தி.மு.க.,-27,255, அ.தி.மு.க.,-24,484, பா.ம.க,-2,843, நாம் தமிழர்-3,523; 16வது சுற்று தி.மு.க.,-23276, அ.தி.மு.க.,-22,647, பா.ம.க.,-3,995, நாம் தமிழர்-3,132; 17வது சுற்று தி.மு.க.,-29,371, அ.தி.மு.க.,-23,440, பா.ம.க,-2,602, நாம் தமிழர்-4,124; 18வது சுற்று தி.மு.க.,-25,169, அ.தி.மு.க,-23,628, பா.ம.க,-3,662, நாம் தமிழர்-3,668; 19வது சுற்று தி.மு.க,-25,143, அ.தி.மு.க.,-25,882, பா.ம.க,-2,870, நாம் தமிழர்-3,887 ஓட்டுகள் பெற்றனர்.

20வது சுற்று தி.மு.க.,-22,206, அ.தி.மு.க.,-18,666, பா.ம.க,-3,770, நாம் தமிழர்-3,194; 21வது சுற்று தி.மு.க.,-17,381, அ.தி.மு.க.,-17,903, பா.ம.க,-3,254, நாம் தமிழர்-2,254; 22வது சுற்று தி.மு.க.,-13,454, அ.தி.மு.க.,-13,799, பா.ம.க,-988, நாம் தமிழர்-1804; 23வது சுற்று தி.மு.க.,-7618, அ.தி.மு.க.,-7,164, பா.ம.க,-582, நாம் தமிழர் -1021; 24வது சுற்று தி.மு.க.,-3,790, அ.தி.மு.க.,-2,748, பா.ம.க,-123, நாம் தமிழர் -481 ஓட்டுகள் பெற்றனர்.

இதில் 6, 19, 21, 22 சுற்றுகளை தவிர மற்ற அனைத்து சுற்றுகளிலும் தி.மு.க., வேட்பாளர் மலையரசன் தொடர்ந்து முன்னிலை வகித்தார். தபால் ஓட்டுகளில் தி.மு.க.,-3,243, அ.தி.மு.க.,-2,228, பா.ம.க,-657, நாம் தமிழர்-554 ஓட்டுகள் பெற்றனர்.

தி.மு.க., மலையரசன்-5,61,589 ஓட்டுகள், அ.தி.மு.க., குமரகுரு-5,07,805 ஓட்டுகள், நாம் தமிழர் கட்சி ஜெகதீசன் -73,652, பா.ம.க, தேவதாஸ்- 71,290 ஓட்டுகள் பெற்றனர். இதில் தி.மு.க., வேட்பாளர் மலையரசன் 53,784 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.

சான்றிதழ் வழங்கல்:


தி.மு.க., வேட்பாளர் மலையரசனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி ஷ்ரவன்குமார் வழங்கினார். மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உதயசூரியன் எம்.எல்.ஏ., சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us