முதியோர் உதவித் தொகைக்கான ஆவணங்கள் சரிபார்க்கும் முகாம்
முதியோர் உதவித் தொகைக்கான ஆவணங்கள் சரிபார்க்கும் முகாம்
ADDED : செப் 21, 2026 06:44 PM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே முதியோர் உதவித் தொகைக்கான ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்குகள் சரிபார்க்கும் முகாம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி வருவாய் குறு வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கினை புதுப்பிக்கும் முகாம் நடந்தது
முகாமிற்கு, சமூக பாதுகாப்புத் திட்டம் தனி தாசில்தார் கங்கா லட்சுமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
முகாமில் முதியோர் உதவித்தொகை பெற்று தற்போது கைரேகை பதிய முடியாமல் உள்ளவர்களின் வங்கிக் கணக்குகள் முடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அஞ்சலகம் மூலம் வங்கிக் கணக்கில் புதிதாக கணக்கு துவங்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து புதிய கணக்கினை துவக்கி வைத்தனர்.
