/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழை வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு சிறப்பு முகாம் மூலம் ஆவணம் வழங்கப்படும்
/
மழை வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு சிறப்பு முகாம் மூலம் ஆவணம் வழங்கப்படும்
மழை வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு சிறப்பு முகாம் மூலம் ஆவணம் வழங்கப்படும்
மழை வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு சிறப்பு முகாம் மூலம் ஆவணம் வழங்கப்படும்
ADDED : டிச 04, 2024 10:34 PM

கள்ளக்குறிச்சி; மழை வெள்ளத்தால் முழுமையாக பாதித்த குடியிருப்பு மக்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து தேவையான ஆவணங்கள் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெஞ்சல் புயல் கனமழை பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மழை காரணமாக ஏற்படுத்தப்பட்ட முகாம்கள் நேற்றுடன் மூடப்பட்டது. மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலுார் பகுதியில் இரு முகாம்களில் மட்டும் மக்கள் உள்ளனர். அங்கு வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடக்கிறது.
தென்பெண்ணையாறு ஓட்டிள்ள கிராமங்களில் குடிநீர் கிணறு, மோட்டார் பம்ப் சேதமடைந்துள்ளது. விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் குடிநீர் டேங்க் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு அரசு உத்தரவின் படி இரு நாட்களில் பட்டா வழங்கி, வீடுகள் கட்டும் பணிக்கு ஆணை வழங்க ஏற்பாடு செய்யப்படும். வீடுகள், கால்நடைகள் சேதங்களுக்கு 50 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஒரிரு நாட்களில் முழுமையாக வழங்கப்படும்.
இதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, மாவட்டத்தில் முழுமையாக பாதித்த 410 குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மழை வெள்ளம் பாதிப்பு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
மழை வெள்ளத்தால் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்த குடியிருப்பு மக்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு பாடபுத்தகம் வழங்கப்படும்.
மாவட்டத்தில் 30 ஆயிரம் ெஹக்டர் பயிர் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக முடித்த பின் நிவாரண உதவிகள் வழங்கப்படும். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கும், நிவாரண உதவி வழங்கப்படும். சேதமான சாலைகள் சீரமைக்கப்படும் என்றார்.
அப்போது டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கட்ரமணன் ஆகியோர் உடனிருந்தனர்.