/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இங்க வேண்டாம்... அங்க வந்துடுங்க... தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் அவலம்
/
இங்க வேண்டாம்... அங்க வந்துடுங்க... தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் அவலம்
இங்க வேண்டாம்... அங்க வந்துடுங்க... தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் அவலம்
இங்க வேண்டாம்... அங்க வந்துடுங்க... தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் அவலம்
ADDED : ஜூன் 24, 2025 08:02 AM
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், ரகசியமாக தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் புதிய அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிப்பதில்லை, மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பலர் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். சிலர் தனியாக கிளினிக்கும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வரும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை, உயர் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் இருந்தால், இங்கு போதிய உபகரணங்கள் இல்லை என்றும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பல்வேறு காரணங்களைக் கூறி அச்சமடைய செய்து, தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தற்போது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்படுவதாகவும், உயர் சிகிச்சை தேவையெனில் சேலம், புதுச்சேரி பகுதி அரசு மருத்துவமனைக்கு 'ரெபர்' செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இன்றி, பெரும்பாலான நேரங்களில் மருத்துவ மாணவர்கள் சிகிச்சை அளிப்பதாகவும் கூறுகின்றனர்.
மருத்துவமனையில் அனைத்து வகையான உயர் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு, தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும் மருத்துவர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.