/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு டவுன் பஸ்களில் 'டோர் லாக்கிங் சிஸ்டம்' படிக்கட்டில் தொங்கிச் செல்லும் அவலத்திற்கு தீர்வு

ADDED : மார் 19, 2025 05:41 AM

திருக்கோவிலுார் : அரசு பஸ்கலில் டோர் லாக்கிங் சிஸ்டம் பொருத்தப்படுவதால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்லும் நிலை தவிர்க்கப்படுகிறது.
திருக்கோவிலுார் அரசு பணிமனையில் டவுன் பஸ் மற்றும் தொலைதுார பஸ்கள் என 57 பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக 30க்கும் மேற்பட்ட பஸ்கள் கிராமப் புறங்களுக்கு இயக்கப்படுகிறது.
குறிப்பாக பள்ளி நேரங்களில் மாணவர்களின் வசதிக்காக 20க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்களில் காலை, மாலை வேளைகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் அவலம் உள்ளது.
டிரைவர் மற்றும் கண்டக்டர் மாணவர்களை கண்டித்தால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அரங்கேறும்.
இதனை தவிர்க்கும் விதமாகவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், பஸ்களில் குறிப்பாக முதல் கட்டமாக பள்ளி மாணவர்கள் பயணிக்கும் டவுன் பஸ்களில் டோர் லாக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு வருகிறது.
திருக்கோவிலுார் பணிமனையில் இதுவரை 33 பஸ்களில் டோர் லாக்கிங் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுப்பாடு டிரைவரிடம் உள்ளது. சுவிட் ஆன் செய்தால் முன் படிக்கட்டு மற்றும் பின் படிக்கட்டுகளில் கதவு திறப்பது மற்றும் மூடுவது உள்ளிட்ட கண்ட்ரோலை இயக்க முடிகிறது.
இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் பஸ்களில் தொங்கிச் செல்லும் காட்சியை முற்றிலு மாக காண முடியவில்லை. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.