/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா
/
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா
ADDED : ஏப் 28, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை:
எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனையுடன், இரவு வீதியுலா நடந்து வந்தது. நேற்று முன்தினம் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடந்தது.
திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.