/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திராவிட தமிழ் தேசிய உணர்வு நுால் வெளியீட்டு விழா
/
திராவிட தமிழ் தேசிய உணர்வு நுால் வெளியீட்டு விழா
ADDED : ஜூலை 26, 2025 11:18 PM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் அங்கனுார் சிவானந்த யோகி நினைவு அறக்கட்டளை 15ம் ஆண்டு விழா, தமிழர் சமயம் தொடக்க விழா மற்றும் திராவிட தமிழ் தேசிய உணர்வு நுால் வெளியீட்டு விழா நடந்தது.
உளுந்துார்பேட்டை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ராஜேந்திரன் வரவேற்றார். பாதுார் முத்து ஒருங்கிணைத்தார். எழுத்தாளர் தமிழ்பற்றாளன் தமிழர் சமயத்தை துவக்கி வைத்தார். அறக்கட்டளை செயலாளர் ராஜேந்திரன், துணைச் செயலாளர் முத்து, முன்னாள் ஊராட்சி தலைவர் ஆரோக்கியதாஸ், உலகத் தமிழ் கவிஞர் பேரவை துணைத் தலைவர் முகைய்யதீன் ஏற்புரையாற்றினர். தாயம்மாள் அரவாணன் நுால் அறிமுக உரையாற்றினார்.
தி.மு.க., செய்தி தொடர்பாளர் குழு தலைவர் இளங்கோவன் நுால் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் உதயசூரியன், நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், தி.மு.க.. ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் செல்லையா, இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், மாணவரணி துணை அமைப்பாளர் குருராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியன், வழக்கறிஞர் சிவசங்கர், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகவேல் நன்றி கூறினார்.

