UPDATED : அக் 06, 2026 04:16 AM
ADDED : அக் 05, 2026 08:16 PM

கள்ளக்குறிச்சி: குதிரைச்சந்தல் கிராமத்தில், பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தில், குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் ஊராட்சியில், 2 லட்சம் லிட்., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 2 லட்சம் லிட்., கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலமாக, ஊராட்சியின் அருகே குடியிருக்கும் மக்களுக்கும் குடிநீர் சப்ளை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. பிரதமரின் ஜல்ஜீவன் திட்ட நிதி மூலமாக நடக்கும் இப்பணியில், இல்லங்களுக்கு நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்கும் விதமாக 798 மீட்டர் நீளத்திற்கு ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டி, பைப்லைன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.பணிகளை ஊராட்சி தலைவர் அனுசெல்லப்பிள்ளை மற்றும் ஊராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைக்கின்றனர்.
