/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிநீர் டேங்க், பஸ்நிறுத்தம் அருகே குப்பைத் தொட்டியால் சுகாதார சீர்கேடு
/
குடிநீர் டேங்க், பஸ்நிறுத்தம் அருகே குப்பைத் தொட்டியால் சுகாதார சீர்கேடு
குடிநீர் டேங்க், பஸ்நிறுத்தம் அருகே குப்பைத் தொட்டியால் சுகாதார சீர்கேடு
குடிநீர் டேங்க், பஸ்நிறுத்தம் அருகே குப்பைத் தொட்டியால் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 03, 2024 04:21 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் குடிநீர் டேங்க் அருகே உள்ள குப்பைத்தொட்டியை அகற்றி மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு பொரசப்பட்டு ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர்கள் நிழற் குடை அருகே ஊராட்சி சார்பில் குடிநீர்மினி டேங்க் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
ஆனால் அதே ஊராட்சி நிர்வாகம் அதன் அருகிலேயே குப்பைத்தொட்டி வைத்துள்ளனர். மேலும், குப்பைகளைக் கொட்டுபவர்கள் தொட்டியில் பாதியும், மீதியை வெளியேயும் கொட்டுகின்றனர்.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் குடிநீர் தண்ணீர் பிடிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், பஸ் நிறுத்தத்திலும் நின்று பஸ் ஏற முடியாமல் தவிக்கின்றனர். மழை நாட்களில் கேட்கவே வேண்டாம்.
குப்பைகளில் நாய்கள், பன்றிகள் மேய்ந்து கிளறுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை குப்பைத் தொட்டிய அகற்றப்படாமல் அதே இடத்தில் வைத்து சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் நலன் கருதி நிழற் குடை மற்றும் குடிநீர் டேங்க் அருகே உள்ள குப்பைத்தொட்டினை அகற்றி வேறு இடத்தில் வைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.