/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உரிமையாளரை தாங்கிய டிரைவர் கைது
/
உரிமையாளரை தாங்கிய டிரைவர் கைது
ADDED : ஆக 29, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் மினி பஸ் உரிமையாளரை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் எல்.எப்., சாலை பகுதியைச் சேர்ந்தவர் நாதன், 65; மினி பஸ் உரிமையாளர். இவரிடம் வெங்கட்டாம்பேட்டையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெயக்குமார், 34; டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை ஜெயக்குமார் பணிக்கு காலதாமதமாக வந்துள்ளார். இதனை நாதன் கண்டித்தார். இதனால் ஜெயக்குமார் ஆத்திரமடைந்து, நாதனை கல்லால் தாக்கினார்.
புகாரின் பேரில், ஜெயக்குமார் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.