/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
/
லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
ADDED : மார் 17, 2025 08:08 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்துார்பேட்டையில் டயர் வெடித்து, 'ஈச்சர்' லாரி கவிழ்ந்ததில், டிரைவர் படுகாயம் அடைந்தார்.
விழுப்புரத்தை சேர்ந்தவர் சந்தோஷ், 27; டிரைவர்.
இவர் நேற்று விழுப்புரத்தில் ஈச்சர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, பெரம்பலுாருக்கு புறப்பட்டார்.
மதியம் 12:00 மணிக்கு உளுந்துார்பேட்டையில், விருத்தாசலம் சாலை மேம்பாலம் அருகே புறவழிச் சாலையில் சென்றபோது, லாரியின் இடது பின்புற டயர் வெடித்தது.
அதில், கட்டுப்பட்டை இழுந்து, லாரி சாலையில் கவிழ்ந்தது.
விபத்தில் படுகாயமடைந்த சந்தோஷை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.