ADDED : செப் 27, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே பாத்ரூமில் மயங்கி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் கணேசன்,56; இவரது கிட்னி பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு 11 மணியளவில் பாத்ரூமுக்கு சென்ற கணேசன் திடீரென மயங்கி விழுந்தார். உடன், அவரது குடும்பத்தினர் கணேசனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் நேற்று முன்தினம் இறந்தார்
புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
