போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
ADDED : பிப் 24, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாராயம், போதை பொருள் மற்றும் குட்கா பொருட்கள் பயன்பாட்டைத் தடை செய்யும் பொருட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் விஜயபிரபாகர் தலைமை தாங்கினார். போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலால் உதவி ஆணையர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் திவ்யா, வி.ஏ.ஓ., குமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
