/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : நவ 20, 2025 05:40 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் உளுந்துார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமிகாத்தாயிணி தலைமை தாங்கினார். உளுந்துார்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது;
வளமான சமுதாயம் வளர மாணவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். புகையிலையில் 100க்கும் மேற்பட்ட நச்சு பொருட்கள் உள்ளன. அது நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தி, நாம் அழிவதோடு நம் குடும்பத்தையும் அழிக்கும். போதைக்கு அடிமையாகாத மனசு தான் திறந்த மனசு. பீடி, சிகரெட்டை விட புகையிலை டேஞ்சர். ஒரு பழக்கத்தை 16 தடவை செய்ய தொடங்கினால், அதை அப்படியே செய்வீர்கள். எந்த ஒரு சூழலிலும் போதை பொருளை பயன்படுத்த முயற்சிக்க கூடாது. சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் இருக்கவேண்டும் என பேசினார்.
நிழ்ச்சியில் வழக்கறிஞர் பச்சையப்பன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாண்டியன், ஆசிரியர்கள் ஞானவேல், கோபால், சிவஈஸ்வரன், ஆசிரியர்கள். மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

