/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 24, 2025 10:22 PM

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா பயிரிடுதல், விதிமுறைகளை மீறி காடுகளை அழித்து நிலங்களாக மாற்றுதல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள், அதனை தடுப்பதற்கான நடவடிக்கை குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது;
கல்வராயன்மலையில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திற்கும் மற்றும் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு சார்பில் கல்வராயன்மலை பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வருவாய், ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, வேளாண்மை, பழங்குடியினர் நலன், தாட்கோ உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே கல்வராயன்மலை பகுதி பொதுமக்கள் நலத்திட்டங்களை உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ராஜா, கள்ளக்குறிச்சி ஏடி.எஸ்.பி., திருமால், உதவி ஆணையர் (கலால்) செந்தில் குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் வெங்கட்ரமணன், கல்வராயன்மலை ஒன்றிய சேர்மன் சந்திரன், துணை சேர்மன் பாச்சாபீ, கல்வராயன்மலை தனி தாசில்தார் கமலக்கண்ணன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.