/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 19, 2025 02:52 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ், உறுப்பினர்கள் சத்யநாராயணன், கல்யாணசுந்தரம், கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் முன்னிலை வகித்தனர்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி கொடியாசைத்து பேரணியை துவக்கி வைத்தார். போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ், இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலுார் இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் விக்னேஷ் செய்திருந்தார்.