/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை, புகையிலை ஒழிப்பு கலெக்டர் ஆய்வு கூட்டம்
/
போதை, புகையிலை ஒழிப்பு கலெக்டர் ஆய்வு கூட்டம்
ADDED : ஜூன் 04, 2025 01:21 AM

கள்ளக்குறிச்சி : போதை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் போதை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.இதில், போதை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு அருகில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாத வகையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்கப்படவில்லை என்ற விளம்பர பதாகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிக்கல்வி, காவல், வருவாய் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் எஸ்.பி., ரஜத்சதுர்வேதி, டி.ஆர்.ஓ.,ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி மற்றும் போலீஸ் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.